இறால் பண்ணையில் தங்கி வேலை செய்த ஒடிசாவை சேர்ந்த 6 பேர் உடல் கருகி பலி : மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 1:34 pm
Andhra 6 Dead -Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூர் மாவட்டம் லங்கவாணிதிப்ப கிராமத்தில் இறால் பண்ணையில் காவல் இருந்த 6 பேர் உடல்கள் கருகி சந்தேகத்திற்கு இடமான வகையில் மரணம்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள லங்கவாணிதிப்ப கிராமத்தில் தனியார் இறால் பண்ணைகள் பல உள்ளன. அவற்றில் ஒரு பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் பணியில் இருந்தனர்.

இறால் பண்ணை அருகே அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் தங்கி அவர்கள் பண்ணையில் வேலை செய்து கொண்டு இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராமமூர்த்தி, தீரன் ஆகியோர் உட்பட பணியிலிருந்து ஆறுபேரும் அவர்கள் தங்கியிருந்த செட்டில் உடல் கருகி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சடலமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்தே ஆறு பேர் மரணத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். மின்கசிவு காரணமாக ஆறு பேர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

ஆனால் இறால்களுக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான ரசாயன பொருட்கள் அவர்கள் தங்கியிருந்த ஷெட்டில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி மரணம் அடைந்து இருக்கலாம் என்றும் தற்போது கருதப்படுகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.

Views: - 215

0

0