நான் மன்னிப்பு கேட்ட மாதிரி ஸ்மிருதி இரானியும் கேட்கணும் : ஜனாதிபதி முர்முவிடம் மன்னிப்பு கேட்ட ஆதிர் ரஞ்சன் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 4:41 pm
Aadhir and Smriti - Updatenews360
Quick Share

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.

பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார். வாய் தவறி அத்தகைய வார்த்தைகள் வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்தார்.

இந்த நிலையில் லோக்சபா சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்மிருதி இரானி ஜனாதிபதி அவர்களின் பெயரை கூறியவிதம் விதம் சரியாக இல்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஸ்மிருதி இரானி ஜனாதிபதியின் பெயரை குறிப்பிடுவதற்கு முன் ஜனாதிபதி அல்லது மேடம் என்று குறிப்பிடாமல் ‘திரவுபதி முர்மு’ என்று மட்டும் மீண்டும் மீண்டும் கூறி கொண்டு இருந்தார்.

ஜனாதிபதியின் பெயருக்கு முன்னால் ஜனாதிபதி அல்லது மேடம் என்ற முன்னொட்டு இல்லாமல் அவரை அழைப்பது அந்த பதவியின் அந்தஸ்தைத் தாழ்த்துவதாகும். எனவே, ஸ்மிருதி இரானி தனது அவமரியாதைக் கருத்துக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 469

0

0