சிக்கியிருந்தா செதச்சுருக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி

15 January 2021, 8:26 am
Quick Share

கர்நாடகாவில் ராஜநாகத்திடம் சிக்கிய இருவர், மயிர் இலையில் உயிர் தப்பும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வனவிலங்குகள் குறித்த வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு என்றும் உள்ளது. அது கவர்ந்திழுக்கும் பட்சத்தில் அதனை வைரலாக்க அவர்கள் தவறுவதில்லை. சமீபத்தில் கூட, கொடும் விஷம் நிரம்பிய இரு ஆண் முல்கா பாம்புகள், பெண் பாம்புடன் யார் இணைவது என சண்டையிட்ட காட்சிகள் வைரலாகி இருந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், சிவ்மோகா என்ற இடத்தில் உள்ள, வனப்பகுதியில் உள்ள மரத்தின் கீழ், கொடும் விஷம் நிரம்பிய ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் இருவர், அந்த கொடிய விஷம் நிரம்பிய ராஜநாகத்தை பிடிக்க முயற்சி செய்தனர். ஒருவர் உதவியாளராக பின்னாடி நிற்க, மற்றொருவர் பாம்பின் வாலை பிடித்து மெல்ல துாக்கினார்.

தனக்கு ஆபத்து நேர்வதை உணர்ந்து கொண்டு சீறிய பாம்பு, அந்த நபரை கடிக்க முயன்றது. அந்த நொடி நேர தாக்குதலில் இருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பினார். அப்போது மீண்டும் பாம்பு கடிக்க முயற்சிக்க, இரண்டாம் முறையாகவும் உயிர் தப்பினார். தனது உதவியாளரின் உதவியோடு அந்த நபர் பாம்பை இறுதியில் பிடித்தார். இந்த பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த நபர் உயிர் தப்பியது குறித்து, தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 6

0

0