ஆன்லைன் ஆர்டரில் செல்போனுக்கு பதில் வந்த சோப்புக்கட்டி: வாடிக்கையாளர் அதிர்ச்சி…!!!

Author: Aarthi
10 October 2020, 3:47 pm
online shop - updatenews360
Quick Share

மும்பை: ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதில் சோப்புக்கட்டி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் 42 வயதான அமோல் பகத். அவர் ஆன்லைனில் ரூ.9,500க்கு செல்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். கொரியர் நிறுவனம் அவரது ஆர்டரை டெலிவர் செய்துள்ளது.

ஆர்டரை பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதில் சோப்புக்கட்டி வந்துள்ளது.

இதனால், மிகுந்த அதிர்ச்சி அடைந்த அமோல் பகத், டெலிவரி பாய் மீதும் கொரியர் நிறுவனத்தின் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 39

0

0