கடும் பனியில் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்! குவியும் சல்யூட்!!

9 January 2021, 6:08 pm
Soldiers Keep Pregnant woman - Updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் கடுமையான பனிபொழிவு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது,. சாலைகளில் பனிக்கட்டிகள் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பட்டடுள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் திரும்ப முடியமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என காஷ்மீரில் உள்ள பார்கியன் கிராமத்தை சேர்ந்த மன்சூர் அகமது ஷேக் என்பவர் ராணுவத்தினரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட ராணுவ வீரர்கள் மருத்துவ ஊழியர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கர்ப்பிணியை முழங்கால் ஆழமான பனியில் 2 கிமீ தூரத்திற்கு அழைத்து சென்றனர்.

கரல்பூரா மருத்துவமனையில் கர்ப்பிணியை அனுமதித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு ராணுவ வீரர்களின் செய்த உதவி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை ராணுவ வீரர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 6

0

0