டெல்லியில் கடும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை..! கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு அவசர அழைப்பு..!

20 April 2021, 8:06 pm
delhi_covid_hospital_updatenews360
Quick Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை வழங்குமாறு ஒரு அவசர செய்தியை மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளார். டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை சில மணிநேரங்களுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

“டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது. டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு நான் மீண்டும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சில மருத்துவமனைகளில் சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஆக்சிஜன் உள்ளது” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். “டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு மடிந்த கைகளால் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிலைமையைக் கையாள்வதில் மத்திய அரசு உணர்திறனோடு அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக மாநிலங்களில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.

டெல்லியில் கொரோனா நிர்வாகத்திற்கான நோடல் அமைச்சராக இருக்கும் சிசோடியா, அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அவசரநிலை அழைப்புகளைப் பெற்றுவருவதாகக் கூறினார். ஆக்சிஜன் வழங்குவதில் ஈடுபடும் நபர்கள் வெவ்வேறு மாநிலங்களில் நிறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஏப்ரல் 20’ஆம் தேதி நிலவரப்படி, 300 மெட்ரிக் டன்களின் ஆரம்ப மதிப்பீட்டிற்கும், டெல்லி சமர்ப்பித்த 700 மெட்ரிக் டன்களின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் இடையில், தேவைப்படும் திட்டமிடப்பட்ட மருத்துவ ஆக்சிஜனில் 133 சதவீதம் அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Views: - 90

0

0