ராமர் கோவில் பூமி பூஜை : இறுதியாக வாழ்த்து சொன்ன காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் கபில் சிபல்..!
5 August 2020, 2:03 pmகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல் மற்றும் சசி தரூர் ஆகியோர் இன்று உத்தரபிரதேச கோவில் நகரமான அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜையை முன்னிட்டு ட்வீட் செய்தனர்.
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தரூர், “அனைவருக்கும் நீதி, அனைத்து நடவடிக்கைகளிலும் நேர்மை, உறுதி மற்றும் தைரியம் ஆகிய மதிப்புகள் இந்த இருண்ட காலங்களில் தேவைப்படுகின்றன.” என்று கூறினார்.
இந்த மதிப்புகள் நிலமெங்கும் பரவியிருந்தால், “ராம ராஜ்ஜியம் வெற்றிகரமான மதவெறிக்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்காது” என்று அவர் கூறினார்.
மறுபுறம், சிபல் பூமி பூஜை நிகழ்வை நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் என குறிபிட்டு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
“நம்பிக்கை சார்ந்த வரலாற்றின் சில தருணங்கள் நமது தேசத்தின் மதத்தின் எதிர்கால போக்கை தீர்மானிக்கின்றன” என்று தன்னுடைய டிவீட்டில் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.