காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுலுக்கு நெருக்கடி : களமிறங்கும் அதிருப்தி தலைவர்… ஓகே சொன்ன சோனியா காந்தி..!!

Author: Babu Lakshmanan
19 September 2022, 10:01 pm
Rahul_Sonia_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை போட்டியிட சோனியா காந்தி அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய நிலையில், தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறது.

Sonia_Rahul_UpdateNews360

கட்சியை வலுப்படுத்த வேண்டும், அதற்கு முதலில் தலைமையை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, சோனியா குடும்பத்தினரை தவிர்த்து தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள்..? என்று காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிர மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சசிதரூர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடும் பட்சத்தில், அது ராகுல்காந்திக்கு பின்னடைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 372

0

0