கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 82 வயதான தாய்..! நான்கு மகன்கள் இருந்தும் தனித்து விடப்பட்ட அவலம்..!

7 September 2020, 4:20 pm
Corona_Mother_UpdateNews360
Quick Share

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், 82 வயதான ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு வயலில் தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக கொட்டகையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் வாரங்கலில் அவரது மகன்களால் கைவிடப்பட்டார்.

லச்சம்மா எனும் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளின் தாயார், தனியாக நடமாட முடியாத நிலையில் உள்ளார். வேலெரு மண்டலத்தின் பீச்சார கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அவர் உயிருக்குப் போராடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக வயதான அந்த தாய்க்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தது. பின்னர் சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதனால் அவர் மூலம் கொரோனா தொற்று பரவலாம் என அஞ்சிய அவரது நான்கு மகன்களும், சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் தோட்டத்தில் கிணற்றின் அருகே அவரைக் கைவிட்டனர்.

நான்கு மகன்கள் இருந்தும் ஒருவருக்குக் கூட தாயைக் காக்கும் மனம் இல்லாமல் தனித்து விடப்பட்டதைக் கண்டு கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது மகள் பின்னர் தனது தாயின் நிலை மற்றும் சகோதரர்களின் மனிதாபிமானமற்ற நடத்தை பற்றி அறிந்து, நோய்வாய்ப்பட்ட தனது தாயை கவனித்துக்கொள்வதற்காக கிராமத்திற்கு விரைந்தார். இதையடுத்து அவரது தாய் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார்..!

Views: - 0

0

0