ஜேஇஇ, நீட் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கலா..? “என்னை அணுகுங்கள்”..! சோனு சூட் அதிரடி..!

28 August 2020, 1:49 pm
sonu_sood_updatenews360
Quick Share

புலம்பெயர்ந்தோரைக் காக்க வந்த கடவுள் என்று பாராட்டப்பட்ட நடிகர் சோனு சூட், செப்டம்பர் மாதம் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு பயண ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் கவலைகள் குறித்து பேசிய சூட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

தேவையான வசதிகள் இருப்பதால் யாரும் தங்கள் தேர்வைத் தவறவிடக்கூடாது. மேலும் மாணவர்களின் பயண ஏற்பாடுகளுக்கான முயற்சிகளை தான் மேற்கொள்வதாக சூட் கூறினார்.

“#ஜேஇஇ_நீட்’ஐ நடத்துங்கள்: பீகார், அசாம் மற்றும் குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மாணவர்களும் உங்கள் பயணத்தின் பகுதிகள் குறித்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் தேர்வு மையங்களை அடைய பயண ஏற்பாடுகளை செய்ய முயற்சிக்கிறேன். இதன் காரணமாக ஒருவர் தங்கள் பரீட்சையை இழக்க வேண்டாம்.” என்று சூட் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு செப்டம்பர் 13’ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ-மெயின் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு சுமார் 8.58 லட்சம் தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர். 15.97 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து இரண்டு முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கல்வி ஆண்டு வீணடிக்க முடியாது என்பதால் நுழைவுத் தேர்வுகளுடன் தாங்கள் முன்னேறுவோம் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0