பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி கைது..! ராஜஸ்தான் போலீசார் அதிரடி..!

24 October 2020, 4:26 pm
Pakistan_Spy_arrest_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவாளியாக பணியாற்றும் ஒருவர் ராஜஸ்தானின்  பார்மரில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் கூடுதல் போலீஸ் டிஜிபி வெளியிட்டுள்ள தகவலில், கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ’க்கு இரகசியங்களை அனுப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் பிடிபட்டுள்ளது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை (நாசிக் பிரிவு) ஒரு ஐஎஸ்ஐ உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தின் ஊழியரை கைது செய்தது.

தீபக் ஷிர்சாத் என அடையாளம் காணப்பட்ட அந்த எச்ஏஎல் ஊழியர், இந்திய போர் விமானங்கள் மற்றும் நாசிக்கில் உள்ள உற்பத்தி வசதிகள் குறித்த ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷிர்சாத் எனும் 41 வயதான அந்த நபர் நாசிக் நகரில் முக்கியமான விமான உற்பத்திப் பிரிவில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் நாசிக் போலீஸ், மாநில ஏடிஎஸ் மற்றும் இராணுவ புலனாய்வு உள்ளிட்ட பல ஏஜென்சிகளின் கண்காணிப்பில் இருந்து, பின்னர் அவரது நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் பின்னர், சந்தேக நபர் தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் சில முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாகவும், ஓசாரில் உள்ள எச்.ஏ.எல் உற்பத்தி பிரிவு, நாசிக் நகரில் உள்ள இந்திய விமானப்படை விமான நிலையம் மற்றும் அந்த அலகுக்குள் தடைசெய்யப்பட்ட பிற பகுதிகள் பற்றிய முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் வாட்ஸ்அப் மூலம் பாதுகாப்பு தொடர்பான வசதிகளின் தீர்க்கரேகை-அட்சரேகை அடையாளங்களுடன் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சீனாவுக்கு உளவு பார்த்ததாக டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0