சுஷாந்த் சிங் வழக்கு..! மேலும் 6 போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்தது என்சிபி..!

13 September 2020, 3:38 pm
Sushant_Singh_Rajput_Updatenews360
Quick Share

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப்பொருள் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் மும்பை மண்டலத்தின் என்சிபி 6 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

மும்பையில் இருந்து கோவா வரை தொடர்ந்த தேடுதல் வேட்டையில், மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான என்சிபி குழுக்கள் கரம்ஜீத் சிங் ஆனந்த் என்பவரை கைது செய்துள்ளன. அவரிடமிருந்து கஞ்சா, சரஸ் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு கஞ்சா சப்ளையர் திவான் அந்தோணி பெர்னாண்டஸ் மற்றும் இருவர் மும்பையின் தாதர் நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை என்சிபி மீட்டுள்ளது.

தவிர, அங்குஷ் அரேஞ்சா எனும் நபர் கடந்த இரண்டு நாட்களில் நகரமெங்கும் நடந்த தேடலில் போவாய் நகரிலிருந்து கைது செய்யப்பட்டார்.

அரேஞ்சா கரம்ஜீத்திற்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வழங்கினார் என்று கூறப்படுகிறது. மேலும் இதே வழக்கில் முன்னர் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட அனுஜ் கேஷ்வானிக்கும் போதைப்பொருளை வழங்கினார் எனவும் என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 7

0

0