பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் : கடல் அலையில் சிக்கி அக்கா, தங்கை பலி!!

7 September 2020, 1:04 pm
Andhra 2 Dead - updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகுல பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா. இவரது இரு மகள்கள் வைஷ்ணவி(வயது 12) பிரவல்லிகா(வயது 15) ஆகியோர் உறவினர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரைக்கு சென்றனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையின் வேகம் அதிகரிப்பால் கடலுக்குள் 5 பேர் இழுத்துச் சென்றனர். உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தோர் ஒரு பெண் இரண்டு இளைஞர் என 3 பேரை காப்பாற்றிய நிலையில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, பிரவல்லிகா இருவரையும் நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு சடலமாக கரை ஒதுங்கிய இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மகள்களையும் இழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 3

0

0