சிக்னல் இல்லாததால் சிக்கல்: மலை உச்சிக்கு சென்று தேர்வெழுதும் மாணவர்கள்..!!

8 June 2021, 2:01 pm
Quick Share

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு எழுத கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலைஉச்சிக்கு சென்று தேர்வு எழுதினர்.

மிசோரம் மாநிலம் ஷைஹா மாவட்டத்தில் மௌரி என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. 1,700 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட இந்த கிராமத்தில் 7 மாணவர்கள் கல்லூரி படித்து வருகின்றனர். இதற்கிடையில், அந்த மாணவர்கள் பயிலும் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

மௌரி மலைக்கிராமம் என்பதால் அந்த மாணவர்களுக்கு தங்கள் செல்போனில் போதிய சிக்னல் கிடைக்காமல் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு போதிய செல்போன் சிக்னல் வேண்டும் என்பதால் அந்த 7 மாணவர்களும் தங்கள் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சிக்கு நடந்தே சென்றனர். மலை உச்சிப்பகுதியில் போதிய சிக்னல் கிடைப்பதால் அங்கு சிறிய குடிசை போன்ற அமைப்பை உருவாக்கினர்.

மழை போன்ற காலநிலையை சமாளிப்பதற்காக வாழை இலையில் கூரை அமைத்து அந்த கூடாரத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி ஆன்லைன் தேர்வை எழுதி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க போதிய சிக்னல் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுவதாகவும் அரசு தங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Views: - 155

0

0