4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் : பிரதமர் மோடி சூளுரை..!

11 September 2020, 12:31 pm
Quick Share

புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்புகள், புதிய தேவைகளை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டார். மேலும், கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறியுள்ளதாக தெரிவித்த அவர், நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது என குறிப்பிட்டார்.

மட்டும் இன்றி, நமது புதிய கல்விக்கொள்கை, புதிய இந்தியாவின் தொடக்கம் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இதனால் அமலாகவுள்ள பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்கள் மேலும் வசதி பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், இளைஞர்களின் சக்தி நாட்டிற்கு மிகவும் அவசியமானது எனவும், குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலமும் புதிய கல்விக்கொள்கையினால் மாற்றம் பெறும் என உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை கட்டாயம் அமையும் எனவும் அவர் கூறினார். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக கல்விக்கொள்கை வளர்க்கும் என தெரிவித்த மோடி, 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0