அக்டோபர் 8 முதல் அரை நாள் வகுப்புகள் தொடக்கம்..! புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..!

By: Sekar
2 October 2020, 6:17 pm
Schools_UpdateNews360
Quick Share

புதுச்சேரி மற்றும் காரைக்கல் பிராந்தியத்தில்9’ஆம் வகுப்பு முதல் 12’ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள் நடக்கும் என்று புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது.

கல்வி இயக்குநர் ருத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த உத்தரவு வரும் வரை வகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்களிலும் அரை நாள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

9 மற்றும் 11’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் இருக்கும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடக்கும்.

வருகை கட்டாயமாக இருக்காது என்றும், மாணவர்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் வழிகாட்டுதலுக்காகவும் மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கல்வித்துறை வெளியிட்டுள்ள வடிவத்தில் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல சிறப்பு போக்குவரத்து வசதி இருக்காது என்று ருத்ரா கூறினார். கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போது மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படாது.

பள்ளி வளாகங்கள் மற்றும் பிற தொடர்புடைய இடங்களை சுத்தம் செய்ய சில ஆயத்த பணிகள் தேவைப்படுவதால் அக்டோபர் 8’ஆம் தேதிதான் வகுப்புகள் தொடங்கும். கொரோனா அறிகுறிகளுடன் குடும்பத்தில் யாராவது இருந்தால், மாணவர் பள்ளிக்கு வரக்கூடாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 39

0

0