‘I am Babri’ என பேட்ச் அணிந்து வந்த மாணவர்கள் : பள்ளியில் மதத்தை திணிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்..? பாஜக கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 7:37 pm
kerala - badge - updatenews360
Quick Share

பாபர் மசூதி இடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், கேரளாவில் பள்ளி மாணவன் அணிந்து வந்த பேட்ச்சினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டுதோறும் டிச.,6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று இஸ்லாமிய அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிக வளாகங்கள்,அரசு அலுவலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பள்ளிக்கு வந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், “I am Babri” என்னும் பேட்ச்சை அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பத்தினம்திட்டா மாவட்டத்தின் கொட்டங்கல் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், இதுபோன்ற வாசகம் அடங்கிய பேட்ச்சை அணிந்து வந்துள்ளனர். இதனைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக அந்த பேட்ச்சை கழற்றச் செய்தார்.

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் தொடர்புடைய சில மாணவ அமைப்பினர் இதுபோன்ற செயலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த சிலர், இந்த பேட்ச்சை மாணவர்களுக்கு வழங்கியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பாஜகவும் இந்த விவகாரத்தில் கண்டிப்பான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 255

1

1