ஸ்ரீநகர், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!

Author: kavin kumar
27 December 2021, 10:35 pm
Quick Share

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டது.

லடாக்கின் கார்கில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இரவு 7.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.நிலநடுக்கத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் 130 கிமீ தொலைவில் இன்று இரவு 7.07 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நேற்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 277

0

0