அடுத்தடுத்து வடமாநிலங்களை குலுக்கும் நிலநடுக்கம் : டெல்லியில் 2.1 ஆக பதிவு!!

20 June 2021, 6:16 pm
Delhi Quake - Updatenews360
Quick Share

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லியில் இன்று மதியம் 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களாக அசாம், மணிப்பூர், மேகாலயா போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Views: - 177

0

0