திருப்பதியில் திடீர் நிலநடுக்கம்…நள்ளிரவில் மக்கள் அதிர்ச்சி: சென்னைக்கு அருகிலும் லேசான நில அதிர்வு..!!

Author: Rajesh
3 April 2022, 10:58 am
Quick Share

ஆந்திரா: திருப்பதி அருகே நெல்லூரில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நெல்லூரில் நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 168 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 கிலோ மீட்டர் நிலத்திற்கு அடியில் ஆழத்தில் நள்ளிரவு 1.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 530

0

0