சாலையில் சென்ற TATA SUMO காரில் திடீர் தீ : அணைப்பதற்குள் முற்றிலும் எரிந்து சாம்பல்!!

Author: Udayachandran
5 August 2021, 9:50 am
Tata Sumo Fire- Updatenews360
Quick Share

ஐதராபாத் : சாலையில் சென்றுகொண்டிருந்த டாடா சுமோ கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டாட்டா சுமோ திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் அந்த வாகனம் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.

எஞ்சினில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இது குறித்துப் பஞ்சகட்டா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 237

0

0