ஆற்றை கடக்கும் போது “திடீரென“ ஆர்ப்பரித்த வெள்ளம் : மரக்கிளையை பிடித்து இரண்டு விவசாயிகள் தத்தளிப்பு!!

26 November 2020, 1:33 pm
Man Survive - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார்களை பாதுகாக்க சென்ற மூன்று விவசாயிகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள ஏர்பேடு கிராமத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் வைத்திருக்கும் மின் மோட்டார்களை பாதுகாத்து எடுத்து வைப்பதற்காக விவசாய நிலத்திற்கு அந்த பகுயில் உள்ள ஆற்றை கடந்து சென்றனர்.

இந்நிலையில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மூன்று பேரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உறவினர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மரத்தில் ஏறி உயிருக்கு மன்றாடும் மேலும் 2 பேரை மீட்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிவர் புயல் காரணமாக சித்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே உள்ள ஓடைகள், ஆறுகள் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக முகாமிற்கு சென்று தங்க வேண்டும் என்றும்,இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 0

0

0