நக்சல் தாக்குதல்..! சி.ஆர்.பி.எஃப் அதிகாரி ஒருவர் வீர மரணம்..! 10’க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்..!

29 November 2020, 10:58 am
Naxal_UpdateNews360
Quick Share

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், நக்சல்களால் ஐ.இ.டி வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையின் கோப்ரா ஜங்கிள் போர் பிரிவு அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

மேலும் 10 கமாண்டோக்கள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சுக்மாவில் உள்ள டாட்மெட்லா பகுதிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில், அங்கு பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் கோப்ரா படையின் 206 பட்டாலியனைச் சேர்ந்த உதவி கமாண்டன்ட் நிதின் பலேராவ் வீரமரணம் அடைந்தார்.

அதே நேரத்தில் இரண்டாவது கட்டளை அதிகாரி உட்பட 10 கமாண்டோக்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக நள்ளிரவில் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த இருவர் சிந்தால்நாரின் சிஆர்பிஎஃப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ”என்று சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்தபோது கோப்ரா மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் கூட்டுக் குழு சிறப்பு நடவடிக்கைக்காக அந்தப் பகுதியில் இருந்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல்வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 1

0

0

1 thought on “நக்சல் தாக்குதல்..! சி.ஆர்.பி.எஃப் அதிகாரி ஒருவர் வீர மரணம்..! 10’க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்..!

Comments are closed.