ஆங்கில வழி கல்விக்கு மாறும் ஆந்திர அரசின் உத்தரவு..! உயர்நீதிமன்றம் தடை..! உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள ஆந்திர அரசு..!

3 September 2020, 1:34 pm
school students_updatenews360
Quick Share

ஆந்திர பிரதேச அரசு தனது பள்ளிகளில் ஒன்று முதல் ஆறு வகுப்புகள் வரை ஆங்கிலத்தை கல்வி ஊடகமாக மாற்றக் கோரி, ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று சீனிவாஸ் குண்டிபள்ளியின் பதிலைக் கோரியது. முன்னதாக சீனிவாஸ் குண்டிப்பள்ளி, ஆந்திர அரசின் உத்தரவிற்கு எதிராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆங்கில வழிக்கல்விக்கு மாற்ற தடை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அரசு நடத்தும் பள்ளிகளுக்கு தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து ஆந்திர அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. வீடியோ மாநாடு மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த உத்தரவு மாநில அரசுக்கு ஆஜரான வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆங்கிலம் கல்வி ஊடகமாக இருக்க விரும்புவதாகவும், இது அரசியலமைப்பின் படி ஒரு முற்போக்கான, எதிர்நோக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.

சீனிவாஸுக்காக ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணன், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, மேலும் இரண்டு வாரங்களில் பதில் தாக்கல் செய்வதாக கூறியதை அடுத்து, செப்டம்பர் 25’ம் தேதி விசாரணைக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

Views: - 0

0

0