லக்கிம்பூர் வன்முறை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை விசாரணை

Author: kavin kumar
6 October 2021, 10:57 pm
Quick Share

டெல்லி: உத்தரபிரதேச வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமாரும் அவரது மகன் ஆசிஸ் மிஸ்ராவும் இருந்ததாகவும் இது திட்டமிட்டு இருவரும் திட்டமிட்டு செய்த கூட்டு சதி என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். இந்த சூழலில் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்கிறது. நாளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

Views: - 226

0

0