விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு..? அமலாக்க இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்த ரியா சக்ரவர்த்தி..!

7 August 2020, 11:22 am
Rhea_Chakraborty_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்குமாறு ரியா சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மீறல்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குனரகம், ரியா சக்ரவர்த்தியை தனது முதலீடுகள் தொடர்பான ஆவணங்களுடன் இன்று காலை 11 மணியளவில் தனது மும்பை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது.

ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் தாக்கல் செய்த போலீஸ் புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றுமாறு கோரி அவர் அளித்த மனுவில் உச்சநீதிமன்றத்தின் விசாரணை வரும் வரை தனது அறிக்கையின் பதிவு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று சக்ரவர்த்தி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்புத்தின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து பீகார் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் ஜூலை 31 அன்று அமலாக்க இயக்குனரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு ரியா சக்ரவர்த்தியும் அவரது குடும்பத்தினரும் உதவியதாகவும், அவரது பணத்தை பறித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

34 வயதான சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்த விசாரணையில் சேர மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கிடையே மும்பை காவல்துறையும் இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0