மறைந்த நடிகர் சுஷாந்தின் முன்னாள் காதலிக்கு திருமணம்… புதிய காதலனை கரம் பிடிக்கிறார்..!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 8:07 pm
Quick Share

மறைந்த நடிகர் சுஷாந்த்தின் முன்னாள் காதலி, அவரது காதலன் விக்கி ஜெயினை திருமணம் செய்யவிருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் இருந்து தொலைக்காட்சியில் நுழைந்து பிரபல நடிகை அங்கிதா லோகண்டேவும், இவரும், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஊரடங்கின் போது சுஷாந்த் சிங், அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அங்கிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, அங்கிதா தனது புதிய காதலரான விக்கி ஜெயின் என்ற தனது புதிய காதலருடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், இருவரும் வரும் 14-ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி, மும்பையில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் இருவரும் மூழ்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 533

1

0