கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உறுதி…! ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனை மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

10 August 2020, 2:00 pm
Swapna_Suresh_UpdateNews360
Quick Share

திருவனந்தபுரம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலில் ரூ.15 கோடியிலான 30 கிலோ தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடத்தல் சம்பவத்தில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில், முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் ஸ்வப்னா சுரேஷ்க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையால் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷிற்கு தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Views: - 8

0

0