கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்? வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் ; ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 1:19 pm
Jagan
Quick Share

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் அகற்ற வேண்டும்.

மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என்று ட்வீட் செய்திருந்தார். இவ்வாறு, எலோன் மஸ்க் EVM-களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து தெரிவித்திருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மஸ்கின் கருத்துக்களைப் பார்த்து, EVMகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.
அந்த வகையில், இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில்,ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன, வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்ட நாமும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 240

0

0