இன்பச் சுற்றுலா சென்ற இளைஞர்கள் : காரில் பயணித்த 5 பேரும் பலியான சோகம்!!

4 September 2020, 5:36 pm
Telangana Accident dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : நாகார்ஜூன சாகர் அணைக்கு உல்லாச பயணமாக இளைஞர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ராஜேஷ், கணேஷ், நாகேந்திரா, பரத் ஆகியோர் இன்று அதிகாலை காரில் உல்லாசப் பயணமாக நாஜார்ஜூனசாகர் அணைக்கு சென்று கொண்டிருந்தனர்.

டிரைவர் வேகமாக காரை ஓட்டியதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத், நாகார்ஜூன சாகர் இடையே உள்ள தைரியபூரி தாண்டா அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருக்கும் தூண் ஒன்றின் மீது மோது விபத்து ஏற்பட்டது.

விபத்தில் கார் நொறுங்கியதால் காரில் இரந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.

Views: - 0

0

0