67வது தேசிய திரைப்பட விருதுகள்: பெருமிதத்துடன் விருதுகளை பெற்ற தமிழ் திரையுலக நட்சத்திரங்கள்..!!

Author: Aarthi Sivakumar
25 October 2021, 1:17 pm
Quick Share

புதுடெல்லி: 67வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் நட்சத்திரங்கள் பெருமிதத்துடன் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Image
courtesy

டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

Image
courtesy

சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது அசுரன் படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Image
courtesy

‘அசுரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ்-க்கு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் தனுஷ், மகன்கள் யாத்ரா, லிங்கா உள்பட குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Image
courtesy

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் என்ற சிறுவனுக்கும் விருது வழங்கப்பட்டது.

Image
courtesy

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக இசை அமைப்பாளர் டி. இமான் பெற்றுக்கொண்டார். சிறப்பு ஜூரி விருதை ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

Views: - 309

0

0