பிரதமருடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திப்பு… பிரதமர் கொடுத்த ‛அட்வைஸ்’

3 July 2021, 11:03 pm
Quick Share

தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜக 20 தொகுதிகளில் போட்யிட்டது. போட்டியிட்டவர்களில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பல ஆண்டுகளாக பிரதிநிதித்துவமே இல்லாத நிலையில், கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், சட்டமன்றத்தில் தடம் பதித்தது தேசிய அளவில் தலைவர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து, வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் 4 பேரும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நேரில் சென்று பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெறவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, பல்வேறு அறிவுரைகளை எம்எல்ஏக்களுக்கு பிரதமர் வழங்கியதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேவையானதை பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். இதையடுத்து அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர்.

Views: - 101

0

0