சையது முஷ்தாக் அலி டிராபி தொடர்: வெற்றி கோப்பையை கைப்பற்றியது தமிழக அணி..!!

1 February 2021, 9:32 am
syed trophy mustakl - updatenews360
Quick Share

அகமதாபாத்: சையது முஷ்தாக் அலி டிராபி இறுதிபோட்டியில் அசத்திய தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் தேசிய ‘டிவென்டி-20’ சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடைபெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி பரோடா அணியுடன் மோதியது.

‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். பரோடா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் சித்தார்த் 4 விக்கெட் கைப்பற்றினார். இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த், கேப்டன் தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

லுக்மன் மெரிவாலா வீசிய 18வது ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஷாருக்கான் வெற்றியை உறுதி செய்தார்.தமிழக அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித், ஷாருகான் அவுட்டாகாமல் ஆடினர். இதன்மூலம் 2வது முறையாக (2020-21) வெற்றியை கோப்பையை கைப்பற்றியுள்ளது தமிழக அணி. முன்னதாக 2006-07ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0