திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அமைச்சர் கே.சி கருப்பண்ணன்!!

17 October 2020, 12:57 pm
Minister Karuppannan - Updatenews360
Quick Share

ஆந்திரா : தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

சுவாமி வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த அமைச்சர் கே சி கருப்பண்ணன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். ஏழுமலையானை தரிசித்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.