எருமை மீது ஏறிய டாடா ஏஸ் வாகனம் : 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியான சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2021, 2:10 pm
ஆந்திரா : பிரகாசம் மாவட்டத்தில் சாலையில் படுத்திருந்த எருமையின் மீது டாட்டா ஏஸ் வாகனம் ஏறியதில் வாகனம் கவிழ்ந்து 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல்- கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையில் படுத்திருந்த எருமையின் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட ஓட்டுநர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரகாசம் அருகிலுள்ள துர்லபடா கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் கோட்டப்பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது இச்சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஓங்கோல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0
0