‘jeet gayi…we won’: பாக்., ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியை…சஸ்பெண்ட் செய்த பள்ளி நிர்வாகம்..!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 8:47 am
Quick Share

ஜெய்ப்பூர்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி. இவர், டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், அதனை நாம் வெற்றி பெற்று விட்டோம் என வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் அப்பில் ஆசிரியை பதிவிட்ட விஷயம் பள்ளி நிர்வாகித்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நபீசா அட்டாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் செய்தி பரப்பிய காரணத்திற்காக அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அவரது பதிவை அடுத்து, மாணவர்களுக்கு வகுப்பில் அவர் என்ன பயிற்றுவிப்பார்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி ஆசிரியையின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 265

0

0