குளிர்சாதன பெட்டி உதவியோடு பாடம் நடத்தும் ஆசிரியை.! பெரும் வரவேற்பு.!!

12 August 2020, 4:41 pm
Pune Teacher - Updatenews360
Quick Share

புனே : குளிர்சாதன பெட்டியின் தட்டை பயன்படுத்தில் ஆன்லைன் பாட்ம் எடுக்கும் ஆசிரியைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழி கற்பித்தலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்நத் ஆசிரியை ஒருவர் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, இரு டப்பாக்களுக்கு இடையே குளிர்சாதனப் பெட்டியின் கண்ணாடி தட்டை வைத்து அதற்கு மேல் தொலைபேசியையும் கீழே பேப்பர்களையும் வைத்து பாடம் எடுத்து வருகிறார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொலைபேசி கையில் பிடித்திருக்க வேண்டிய அவசியமின்றியும் மாணவர்கள் தெளிவாக பாடத்தை கவனிக்கும் வகையிலான ஆசிரியையின் ஐடியாவிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.