வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாய்..! தெலுங்கானா முதல்வர் அதிரடி..!

19 October 2020, 7:12 pm
KCR_Telangana_UpdateNews360
Quick Share

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஹைதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் அறிவித்துள்ளார். தவிர முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

வெள்ளம் காரணமாக அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இழந்து மக்கள் தவிப்பதால், நாளை முதல் 10,000 ரூபாய் நிதி உதவி விநியோகிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத், ரங்கரெட்டி, மற்றும் மேட்சல் மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு இதை நடைமுறைப்படுத்த சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தினார். தலைமை உதவி செயலாளர் சோமேஷ்குமாரிடம் நிதி உதவி விநியோக திட்டத்தை கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஹைதராபாத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் ஏழைகளுக்கு உதவுவதை தங்கள் பொறுப்பாக கருதி, இந்த விநியோகத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.

எண்ணிக்கை லட்சங்களில் இருந்தாலும், எத்தனை பேருக்கும் உதவி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார். உதவி பெறும் குடும்பங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என அவர் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த பணம் வழங்களில் ஆளும் டி.ஆர்.எஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக பங்கேற்கவும், தகுதியானவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து மீட்டெடுக்கவும், விரைவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருவதை உறுதி செய்யவும் சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்காக 550 கோடியை அரசு உடனடியாக நகராட்சி நிர்வாகத் துறைக்கு விடுவிக்கும் என்றார்.

Views: - 16

0

0