காலையில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட மணப்பெண்… மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
14 மே 2022, 5:58 மணி
Quick Share

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகர் பாத்ததோட்டா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. இவர்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண சடங்குகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருமண நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா உடன் இணைந்து மணப்பெண் லட்சுமி நடனம் ஆடினார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று மாலை மணப்பெண் லட்சுமி கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். கழிவறைக்கு சென்ற லட்சுமி நீண்ட நேரமாக உறவினர்கள் அழைத்தும் வராத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மணப்பெண் லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் லட்சுமி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாத்தபேட்டா போலீசார் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மணப்பெண் லட்சுமி, தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறிய நிலையில், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும், அதனால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணம் முடிந்த நிலையில், பூச்சிமருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • England கிட்டயே நெருங்க முடியாது : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி!
  • Views: - 922

    0

    0