தெலுங்கானா முதல்வரின் கோட்டையிலேயே மண்ணைக் கவ்விய டி.ஆர்.எஸ்..! வெற்றி வாகை சூடிய பாஜக..!

10 November 2020, 5:47 pm
raghunandan_rao_bjp_mla_elect_updatenews360
Quick Share

தெலுங்கானாவில் டுபாக்கா தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் எம். ரகுநந்தன் ராவ் 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) மிகப்பெரும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இதன் மூலம் 2014’க்கு பிறகு தொடந்து ஆறு ஆண்டுகளாக எந்த இடைத்தேர்தலில் தோற்காத டி.ஆர்.எஸ். முதல்முறையாக தோற்றுள்ளது.

டி.ஆர்.எஸ் 2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அந்த இடத்தை தற்போது தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் மூன்றாவதாக வந்து மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ்-க்கு மாற்றாக மக்கள் பாஜகவை பார்ப்பது வெளிப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்த ராவ் 62,772 வாக்குகளையும், டி.ஆர்.எஸ் வேட்பாளர் எஸ்.சுஜாதா 61,302 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் சி.சீனிவாஸ் ரெட்டிக்கு வெறும் 21,819 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

2014 தேர்தலுக்குப் பிறகு டி.ஆர்.எஸ் ஒரு இடைத்தேர்தலில் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். டி.ஆர்.எஸ் மக்களவை அல்லது சட்டமன்றம் என அனைத்து இடைத்தேர்தல்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், டி.ஆர்.எஸ்ஸின் தோல்வி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பதிவு செய்யப்பட்டது டி.ஆர்.எஸ். கட்சிக்கு நிச்சயம் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது. மேலும் இது டிஆர்எஸ் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வழங்கிய ஆணை என்று பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் கூறினார்.

“வாக்கெடுப்பின் முடிவு எதிர்பார்த்த முறையில் இல்லை. தீர்ப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், எங்கள் எதிர்கால உத்திகளை இதன் அடிப்படையில் செயல்படுத்துவோம்” என்று டிஆர்எஸ் செயல்பாட்டுத் தலைவரும் நகராட்சி அமைச்சருமான கே.டி.ராமராவ் கூறினார். தோல்வி குறித்து கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வெற்றி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் கொடுங்கோன்மை ஆட்சியின் முடிவின் தொடக்கமாகும் என்று மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் தெலுங்கானா சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் இரண்டாக உயர்ந்துள்ளது.

Views: - 29

0

0