தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

19 April 2021, 9:42 pm
k_chandrasekhar_rao_updatenews360
Quick Share

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்தார்.

“முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. அவருக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு அவரது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.

மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.” என்று தலைமை செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14’ம் தேதி, நல்கொண்டா மாவட்டத்தின் ஹாலியாவில் ஒரு பெரிய தேர்தல் பேரணியில் முதல்வர் உரையாற்றினார். ஏப்ரல் 17 அன்று தேர்தல் நடைபெற்ற நாகார்ஜுனா சாகர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கு அப்போது பிரச்சாரம் செய்தார்.

சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 81

0

0