திடீரென கொட்டிய ஆலங்கட்டி மழை.. வெள்ளைப் போர்வை போற்றியது போல சாலைகள்… குளிர்ச்சியான வானிலையால் மக்கள் குதூகலம்.!!
Author: Babu Lakshmanan16 மார்ச் 2023, 9:20 மணி
தெலங்கானாவில் பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தெலங்கானாவில் வானிலை மாற்றம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷன நிலையை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக, அதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள மக்கள் இன்னும் 3 நாட்களுக்கு உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சாலைகளில் வெள்ளைப் போர்வை போற்றியது போல பனிக்கட்டிகள் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆலங்கட்டி மழையை பிடித்து சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளது.
0
1