திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது இருமடங்காக அதிகரிப்பு…!!

5 November 2020, 5:11 pm
Tirupathi Temple - updatenews360
Quick Share

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் பொதுமக்களுக்கு இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு இருந்த இலவச தரிசன டோக்கன் கடந்த வாரம் முதல் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இலவச தரிசன டோக்கனை பெற பக்தர்கள் அதிகளவில் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை நடத்தி கூடுதல் டோக்கன்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

Tirupathi- updatenews360 (16)

இதுவரை தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை 3ம் தேதி முதல் 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை விடுத்து நேரக்கட்டுப்பாடு இன்றி யார் எப்போது வந்தாலும் இலவச தரிசன டோக்கன் இருக்கும் நாள்களில் அதை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசித்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு பிறகு தரிசன டிக்கெட் கிடைத்தாலும் பக்தர்கள் அதைப் பெற்றுக் கொண்டு 2 நாட்கள் திருப்பதியில் தங்கி ஏழுமலையானை தரிசித்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இது பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Views: - 23

0

0