ஜெகன் மோகன் ரெட்டிக்கு ‘ரெடி’யாகும் கோவில்…! அக்கட தேசத்தில் ஒரு பாசக்கார எம்எல்ஏ…!

6 August 2020, 8:39 pm
Quick Share

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, அவரது கட்சி எம்எல்ஏ கோவில் கட்ட முடிவு செய்து, அதற்காக பூமி பூஜை நடத்தி அசத்தி இருக்கிறார்.

சினிமா உலகத்தில் இருக்கும் பலருக்கு அபிமானிகள், ரசிகர்கள் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பச்சை குத்திக் கொள்வார்கள், அவரை போன்று தம்மை மாற்றிக் கொள்வார்கள், இன்னும் சொல்ல போனால் கோயில் கட்டிய நிகழ்வுகளும் கூட உண்டு.

தமிழகத்திலும் அப்படிப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. இதில் அரசியல் மட்டும் விலக்கல்ல. பிரதமர் மோடி, டிரம்ப் உள்ளிட்டோருக்கு கூட கோவில் கட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இந் நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவரது கட்சி எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

அவரது பெயர் தலாரி வெங்கட்ராவ். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபுலாபுரம் தொகுதி எம்எல்ஏ. இவர் தான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து வெங்கட்ராவ் தெரிவித்துள்ளதாவது: முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அடுத்த தலைமறையினர் அவரை ஒரு கடவுளாக கருத வேண்டும் என்ற எண்ணத்தில் கோயில் கட்டப்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரையாக சென்று மக்களின் தேவைகளை அறிந்து, திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு நல்லது செய்ய அவரை கடவுள் அனுப்பி இருக்கிறார். எந்த தீய சக்தியும் அவரை நெருங்கக்கூடாது. அதற்காகவே கோவில் கட்டுகிறேன் என்று கூறினார்.

Views: - 2

0

0