எல்லைப் பாதுகாப்பு படையினருடன் நேபாள குடிமக்கள் மோதல்..! எல்லையில் திடீர் பதற்றம்..!

8 October 2020, 1:41 pm
SSB_Jawans_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் சுந்தர் நகர் கிராமத்திற்கு அருகே சாஸ்த்ரா சீமா பாலின் (எஸ்.எஸ்.பி) எனும் எல்லைப் பாதுகாப்புப் படையின் 49’வது பட்டாலியன் வீரர்கள் மற்றும் நேபாள குடிமக்கள் இடையே மோதல் நடந்துள்ளது. இது இப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.

நேபாளத்திலிருந்து திங்கள்கிழமை வந்த லாரி ஒன்றை எஸ்.எஸ்.பி. மடக்கி சோதனை செய்துள்ளனர். இந்த லாரியில் ரூ 24.55 லட்சம் மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்கள் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்குள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து நௌஜல்ஹா கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் சக்ரவர்த்தி ஒருவர் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பந்தர்போஜ் கிராமத்தில் பாசனக் குழாயில் ஏற்பட்ட சிதைவு காரணமாக எல்லை தூண் எண் 17 மற்றும் 18 க்கு இடையில் இரு நாட்டுக்கும் பொதுவான பகுதியில் நீர் தேங்குவதை எதிர்த்து ஏராளமான நேபாள குடிமக்கள் எல்லையில் கூடினர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள பொதுமக்கள் போலீஸ் படையை வரவழைக்கும் அளவு விசயங்கள் மோசமாகின.

ஆனால் இந்தியாவுக்குள் பொருட்களை கடத்த இருசக்கர வாகன ஓட்டிகள் மேற்கொண்ட பாதை இதுதான் என்பதால், எல்லை சோதனைகள் சில நேபாள மக்களை எரிச்சலூட்டியதாக எஸ்.எஸ்.பி அதிகாரிகள் நம்புகின்றனர்.

சில நேபாள குடியிருப்பாளர்கள் இரண்டு எஸ்.எஸ்.பி ஜவான்கள் சம்பவத்தை தொலைபேசியில் வீடியோ எடுத்ததை தடுக்க, நேபாள போலீஸ் முன்னிலையில் பறித்ததாகவும் சில கிராமவாசிகள் கூறினர். இருப்பினும், இந்த சம்பவத்தை எஸ்.எஸ்.பி உறுதிப்படுத்தவில்லை.

Views: - 58

0

0