விசாகப்பட்டினம் அருகே எண்ணெய் ஆலையில் பயங்கர தீ : பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்!!

28 January 2021, 9:53 am
Vizhag Fire - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகிலுள்ள சமையல் எண்ணெய் பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை 10 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

ஆந்திராவின் தொழில் நகரமான விசாகப்பட்டினம் அருகில் உள்ள காஜூவாக்கா பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அங்கு உள்ள தொழிற்சாலைகளில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்குள்ள பாராமவுண்ட் சமையல் எண்ணெய் பேக்கிங் கம்பெனியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சமையல் எண்ணெய் உட்பட பூஜைக்கு பயன்படுத்தப்படும் என்னையும் பேக்கிங் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மீதும் தீ பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது. இது தவிர அங்கு எண்ணெய் லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளும் தீக்கிரையாகின.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு வண்டிகள், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு தீயணைப்பு வண்டிகள் என 10 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் அங்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருள் எண்ணையில் ஏற்பட்ட தீயை உடனடியாக கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை கொளுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது.

Views: - 0

0

0