26/11 நினைவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம்..? பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

20 November 2020, 3:48 pm
Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் டோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

26/11 பயங்கரவாத தாக்குதலின் நினைவையொட்டி பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நேற்று, லாரி ஒன்றில் இருந்த பயங்கரவாதிகள் குழு நேற்று காலை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சென்று கொண்டிருந்தது. நக்ரோட்டா பகுதியில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பான் டோல் பிளாசா அருகே லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜம்மு மாவட்டத்தின் நக்ரோட்டா பகுதியில் உள்ள பான் டோல் பிளாசா அருகே அதிகாலையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லாரியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று மணிநேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பெருமளவில் லாரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஜம்மு மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகேஷ் சிங், பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலை திட்டமிட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்களை சீர்குலைப்பதை இலக்காகக் கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், 26/11 நினைவாக பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, பிரதமர் மோடி அவசரக் கூட்டத்தை நடாத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது

Views: - 17

0

0