சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிய பைக் : கீழே விழுந்தவர்கள் மீது ஏறிய லாரி… திக் திக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 4:15 pm
Accident - Updatenews360
Quick Share

தெலுங்கானா : மேட்சல் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி ஏறி பதை பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்சலில் இன்று அதிகாலை ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது .

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் மற்றும் சாலையை கடக்க முயன்ற நபர் ஆகியோர் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த கனரக லாரி கீழே விழுந்து கிடந்த வாகன ஓட்டிகள் மீது ஏறி இறங்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆண், பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மூன்று பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன .

Views: - 184

0

0