பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது தே.ஜ.கூட்டணி அரசு…!!

11 November 2020, 8:21 am
modi nithish - updatenews360
Quick Share

பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கூட்டணியின் வெற்றியை முன் நிறுத்தி வருகின்றனர். இது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ்குமார் தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியான பின்னர் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என அறிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதிஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார் என பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0