ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு : 4 நாட்களாக நடந்த போராட்டம் தோல்வி!!

8 November 2020, 12:08 pm
Borewell Dead -updatenews360
Quick Share

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். கடந்த 4ம் தேதி இவரது 3 வயது மகன் பிரகால்த், விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பிரகால்த் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்ததால், மீட்பு படையினர் வந்து மீட்பு பணியை தொடங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 3 நாட்களாக இரவு பகலாக ராணுவ வீரர்கள், மாநில மீட்பு குழுவினர் போராடினர். ஆனால் இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற சிறுவனை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பிறகு சிறுவனின் உடலைத்தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல 4 நாட்களுக்கு பிறகு 3 வயது சிறுவன் பிரகலாத்தின் சடலமும் மீட்கப்பட்டள்ளது.

Views: - 28

0

0